search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைப் பணி"

    • 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டன
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஒன்றியத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கிராமங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள வசதியாக, அனக்காவூர், எச்சூர் ஆகிய கிராமங்களுக்கு தலா ரூ.8.50 லட்சம் மதிப்பில் 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டு இருந்தன.

    அதேப் போல் அனக்காவூர், மேல்மா, மகாஜனம்பாக்கம், அனக்காவூர் ஆகிய கிராமங்களில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2.77 லட்சம் மதிப்பில் 3 மின்கலன் வண்டிகள் வழங்கப்பட்டு இருந்தன.

    இந்த நிகழ்ச்சி அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமைத் தாங்கினார்.

    செய்யாறுஒ.ஜோதி எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் பங்கேற்று டிராக்டர்கள் மற்றும் மின்கலன் வண்டிகளை ஊராட்சித் தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதில் மாவட்டக் கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதிகா குமாரசாமி, கனிமொழி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், அனக்காவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.கே.ரவிக்குமார், திராவிட முருகன், மோ.ரவி, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • புதிய யூனியன் அலுவலக அமைவிடத்தில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டது.
    • ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் யூனியன் அலுவலகம் தற்போது ரெயில்வேபீடர் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள இந்த அலுவலகம் கடும் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது.

    திருமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு செய்யப்பட்ட போது யூனியன் அலுவல கத்தின் முன்புற பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படும் என பொதுபணி துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து திருமங்கலம் யூனியன் நிர்வாகம் அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடத்தினை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியது.

    அதில் கப்பலூர் அருகே உச்சப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் போதுமான நிலம் இருந்தது தெரிய வந்தது. இந்த இடத்தில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி மற்றும் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகே 75 சென்ட் இடத்தில் புதிய யூனியன் அலுவலகம் அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    அதன்படி அந்த இடமானது திருமங்கலம் பி.டி.ஓ. பெயருக்கு பெயர் மாற்றம் செயப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இடத்தை வருவாய் துறையினர் அளந்து கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து புதிய யூனியன் அலுவலகம் அமைய உள்ள இடத்தை தூய்மை செய்யும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள், தலைவர், கவுன்சிலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சீர் செய்த பின்பு கற்கள் ஊன்றி கம்பிவேலி போடப்பட்டு நிதி ஒதுக்கீடு வந்தவுடன் கட்டிடப் பணிகள் தொடங்கப்்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.
    • மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் சார்பில் 251-வது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நடைபெற்றது. 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.

    அப்போது, ஆலயங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் கந்தசாமி கோவில் அருகில் உள்ள குளம் மட்டுமின்றி மலைக் கோவில் கைலாசநாதர் கோவில், சிதம்பர சுவாமிகள் திருமடம், விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தியாகராஜன் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற தலைவர் ச.கணேசன் செய்திருந்தார்.

    • சிறப்பு கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    போளூர்:

    போளூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    போளூர் பேரூராட்சியில் செயற்பொறியாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். பேரூராட்சியின் செயலாளர் முகமது ரிஜ்வான் அனைவரையும் வரவேற்றார். போளூர் பேரூராட்சியின் தலைவர் ராணி சண்முகம் கொடி அசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இந்தத் தூய்மை பணி ரத ஊர்வலம் போளூர் முக்கிய வீதிகள் வழியாக பஜார் வீதி செந்தாரப்பட்டி தெரு பஸ் நிலையம் போன்ற வழியாக சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அடைந்தது.

    பின்னர் பேரூராட்சியின் திட்டக் குழு மேலாண்மை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சி போளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

    இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தூய்மைப்பணி குறித்து மாணவிகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, போளூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் சாந்தி நடராஜன், மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன், ரங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×